அதிமுக உட்கட்சி தேர்தல் : கரூர் மாவட்ட செயலாளராக மீண்டும் எம்.ஆர் விஜயபாஸ்கர் போட்டியின்றி தேர்வு!!

Author: Udayachandran RadhaKrishnan
21 April 2022, 6:04 pm

கரூர் : அதிமுக உட்கட்சி அமைப்பு தேர்தலில் கரூர் மாவட்ட செயலாளராக மீண்டும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உட்கட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.

அதில் முதல் கட்டமாக கரூர் மாவட்டம் மாவட்டக் கழகச் செயலாளர், மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என மாவட்ட அளவிலான பதவிக்கான கழக அமைப்பு தேர்தல் இன்று நடைபெற்றது.

கரூர் மாவட்டத்திற்கு கழக அமைப்பு தேர்தல் பொறுப்பாளராக தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர், சேலம் புறநகர் மாவட்ட புரட்சித்தலைவி பேரவைச் செயலாளர் R. இளங்கோவன் அவர்களும் மற்றும் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A.P.ஜெய்சங்கர் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டக் கழக அலுவலகத்தில் கழக அமைப்புத் தேர்தலில் மாவட்ட கழக செயலாளர் பதவிக்காக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விருப்ப மனு அளித்தார்.

அவரை எதிர்த்து யாரும் போட்டி இடததால் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட கழக செயலாளர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் மாவட்டக் கழக துணைச் செயலாளர், மாவட்ட அவைத்தலைவர் இணைச் செயலாளர்கள், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்காக கழக நிர்வாகிகள் ஆர்வத்துடன் விருப்ப மனு அளித்தனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1215

    0

    0