கோவையில் சூடு பிடித்த உள்ளாட்சி தேர்தல் : பிரச்சாரத்தை துவங்கிய அதிமுக வேட்பாளர் ஷர்மிளா சந்திரசேகர்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 February 2022, 8:25 pm

கோவை : கோவையில் 38வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஷர்மிளா சந்திரசேகர் கட்சி நிர்வாகிகளுடன் சுவாமி தரிசனம் செய்த பின் பிரச்சாரத்தை துவக்கினார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதில் கோவை மாநகராட்சி 38வது வார்டில் அதிமுக சார்பில் டாக்டர்.ஷர்மிளா சந்திரசேகர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இந்த சூழலில், அவர் நேற்று பூமார்க்கெட் அருகே உள்ள மாநகராட்சி மேற்குமண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதனை தொடர்ந்து அவர் போட்டியிடும் 38வது வார்டுக்கு உட்பட்ட ஓனாம்பாளையம் பகுதியில் உள்ளா விநாயகர் கோவில், கருப்பராயன் கோவில் மற்றும் ஐயப்பன் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அதிமுகவின் சாதனைகள் அடங்கிய பிரசுரங்களை வீடு வீடாக மக்களுக்கு அளித்து வாக்குகளை சேகரித்தார். அவருடன் புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சந்திரசேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

dr sharmila chandra sekar

https://www.facebook.com/Drsharmilachandrasekar

  • Kasthuri About 60-Year-Old Actor 60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!