அதிமுக கவுன்சிலர் சஸ்பெண்ட்… 2 மாமன்ற கூட்டங்களில் பங்கேற்க தடை விதித்து கோவை மேயர் உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
29 September 2023, 1:58 pm

அதிமுக கவுன்சிலர் சஸ்பெண்ட்… 2 மாமன்ற கூட்டங்களில் பங்கேற்க தடை விதித்து கோவை மேயர் உத்தரவு!!

கோவை மாநகராட்சி 47வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரனை இடைநீக்கம் செய்து அடுத்த இரண்டு மாமன்ற கூட்டத்தில் பங்கேற்க தடை விதித்து கோவை மாநகராட்சி மேயர் கல்பனா உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் மாமன்ற உறுப்பினர் கூட்டம் மேயர் கல்பனா தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது கோவை மாநகராட்சியில் அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு மேல் தாமதமாக வரி செலுத்துபவர்களுக்கு ஒரு சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்ததை ரத்து செய்ய கோரி அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் மற்றும் சர்மிளா ஆகியோர் பதாகைகளுடன் மாமன்ற கூட்டம் நடக்கும் விக்டோரியா ஹாலுக்குள் சென்று வலியுறுத்தினர்.

இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் மூவரையும் வெளியேறுமாறு மேயர் கூறியதை அடுத்து மூவரும் விக்டோரியா ஹாலிக்கு வெளியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் 47 வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரனை இடைநீக்கம் செய்தும் அடுத்த இரண்டு கூட்டத்தில் பங்கேற்க தடை விதித்தும் மேயர் கல்பனா தற்பொழுது உத்தரவிட்டுள்ளார்.

  • Kalakalappu 3 Update சுட சுட வேலையில் சுந்தர் சி…கலகலப்பு 3-யின் கலக்கல் அப்டேட் வெளியீடு..!