அதிமுக – திமுக மோதல்.. அரசு அலுவலகத்திற்குள் அதிமுகவினர் போராட்டம் நடத்த திமுக எதிர்ப்பு : வாக்குவாதத்தால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
26 November 2022, 5:58 pm

பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் புதிய குடிநீர் இணைப்புகளுக்கு முறையாக கட்டணம் வசூலிக்க வேண்டும் என கூறி அதிமுகவினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் திமுகவினர் எடிதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரப்பட்டி பேரூராட்சி உள்ளது. இங்கு 15 வார்டுகள் உள்ளது. இங்கு கடந்த 2007 ஆம் ஆண்டு 462 பேர் புதிய குடிநீர் இணைப்பிற்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நீண்ட ஆண்டுகளாக புதிய இணைப்பு வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது விண்ணப்ப கட்டணமாக நூறு ரூபாயும், பத்தாயிரம் ரூபாய் டெபாசிட் கட்டணமாக வசூலிப்பதற்காக அறிவிப்பு பலகை இன்று பேரூராட்சி அலுவலகம் முன்பு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இதில் வங்கியில் செலுத்தப்பட வேண்டிய வங்கி கணக்கு எண் அச்சடிக்கப்படாததால் இதுகுறித்து அதிமுகவினர் முறையாக அறிவிப்பு வைக்க வேண்டுமென கோரிக்கை வைத்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும் செயல் அலுவலர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது எதற்காக அலுவலகத்திற்குள் வருகிறீர்கள் எனவும் வெளியே செல்லுங்கள் என திமுக கவுன்சிலர்கள் கூறியதலால் அதிகாரிகளுக்கும், திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • singampuli shared the experience on mayandi kudumbathar movie நான் நடிக்கவே மாட்டேன்னு சொன்னேன், ஆனா அவர்தான் என்னைய?- ஓபனாக போட்டுடைத்த சிங்கம்புலி…