அதிமுக பொதுக்கூட்டம்.. தூத்துக்குடி விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு…!!!

Author: Udayachandran RadhaKrishnan
18 October 2023, 6:02 pm

அதிமுக பொதுக்கூட்டம்.. தூத்துக்குடி விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு…!!!

சங்கரன்கோவிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார்.

அவருக்கு வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான கடம்பூர் ராஜு எம்எல்ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சருமான எஸ்பி சண்முகநாதன், முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி சங்கரன்கோவில் ராஜலட்சுமி உள்ளிட்டோர் தலைமையில் அதிமுகவினர் மேளதாளம் முழங்க பொன்னாடைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதிமுகவினரின் வரவேற்புகளை ஏற்றுக் கொண்ட அதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பின்னர் கார் மூலம் சங்கரன்கோவில் புறப்பட்டு சென்றார்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!