இபிஎஸ் வசம் அதிமுக.. மீண்டும் உறுதி செய்த நீதிமன்றம் : இனிப்பு வழங்கி கொண்டாடிய முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி!

Author: Udayachandran RadhaKrishnan
25 August 2023, 2:44 pm

இபிஎஸ் வசம் அதிமுக.. மீண்டும் உறுதி செய்த நீதிமன்றம் : இனிப்பு வழங்கி கொண்டாடிய முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி!

ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம் நடைபெற்றது.

எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், மற்றும் எடப்பாடி பழனிச்சாமி பொது செயலாளர் தேர்தலையும் எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மேலும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கிய தீர்மானங்களுக்கும் தடை விதிக்க முடியாது என தெரிவித்துள்ளது. ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டிலும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை தமிழகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில் அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க என முழக்கங்களை எழுப்பினர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 335

    0

    0