Categories: தமிழகம்

ஈனப்பிறவி யார் என அண்ணாமலைக்கு தெரியும்.. பாஜகவில் இருந்து வெளியேறிய அதிமுக கிளர்ந்துள்ளது.. செல்லூர் ராஜூ பேச்சு!

ஈனப்பிறவி யார் என அண்ணாமலைக்கு தெரியும்.. பாஜகவில் இருந்து வெளியேறிய அதிமுக கிளர்ந்துள்ளது.. செல்லூர் ராஜூ பேச்சு!

அதிமுக மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான் என்ற செல்வம், அதிமுக மாநில மருத்துவர் அணி இணை செயளாலர் டாக்டர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் சொல்லப்பா பேசுகையில் “5 ஆண்டுகளில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் என்னென்ன திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

சாகித்திய அகாடமி விருது பெற்றவர் எனும் தகுதியைத் தவிர வேறென்ன தகுதிகள் உள்ளது. சாகித்திய அகாடமி விருது பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டுமென்றால் 1,000 பேருக்கு மேலாக விருது பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக ஆக வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால் மக்களுக்கு என்ன பயன்கள் கிடைத்தது, 2026 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்த உடன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு விழா நடைபெறும் வேண்டும் என்பதற்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நாங்கள் அழுத்தம் கொடுக்கவில்லை.

கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக என்றென்றும் மக்களுடன் கூட்டணி வகிக்கிறது, பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவுக்கு நன்றி கடன் பட்டுள்ளது, ஜெயலலிதா தலைமையில் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்ததால் மட்டுமே மாம்பழ சின்னத்தை பெற முடிந்தது,

அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேமுதிக 29 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக அங்கம் வகித்தார்.

பாமக, தேமுதிக நன்றி கடன்களை மறந்து விடக்கூடாது, இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று நினைத்தவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் வீழ்த்தப்படுவார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் தான் இரட்டை இலை சின்னத்தை நிரந்தரமாக பெற முடியும்.

எல்லாவற்றையும் மறந்து அதிமுகவினர் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற உழைக்க வேண்டும்” என பேசினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசுகையில் “அதிமுகவினர் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் வாரிசுகள், தலைவர்கள் வழியிலேயே தொண்டர்கள் செயல்படுகிறார்கள், மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் இட வேண்டும் என எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளுக்கு ஏற்றார் போல அதிமுகவினர் செயல்படுகிறார்கள்,

அதிமுக மாநாட்டில் புளியோதரை சாப்பிட்டு விட்டு அதிமுக தொண்டன் எழுச்சியாக பங்கேற்றார்கள், திமுக மாநாட்டில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு திமுக தொண்டன் சீட்டு விளையாடினார்கள்.

மத்திய – மாநில அரசின் தவறான நடவடிக்கையால் விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிறது, இந்தியாவில் போதைப்பொருள் கடத்தலுக்கு குஜராத் மற்றும் தமிழ்நாடு தளமாக விளங்குகிறது மக்கள் தலைவராக விளங்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமியை ஈனப்பிறவி அண்ணாமலை தவறாக விமர்சனம் செய்கிறார்.

5 ஆண்டுகளில் கடைசி 6 மாதங்களில் மட்டுமே சு.வெங்கடேசன் மக்கள் மத்தியில் வலம் வருகிறார், இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுக்கு அடிமையாக செயல்படுகிறது, மக்களுக்கு உண்மையாக செயல்படக்கூடிய தொண்டர்கள் அல்லாத கட்சிகளாக காங்கிரஸ் மற்றும் இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது.

திமுக ஆட்சியில் ஒரு சொட்டு மதுபானம் அல்லாத மாநிலமாக மாற்றப்படும் எனக் கூறப்பட்டது ஆனால் தற்போது போதைப்பொருள் மாநிலமாக விளங்குகிறது என கனிமொழியிடம் மக்கள் கேட்க வேண்டும்.

பாரதிய ஜனதா கூட்டணியிலிருந்து வெளியே வந்ததால் அதிமுக கிளர்ந்து எழுந்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பம் மட்டுமே உலகத்தில் ஆட்சியை நடத்தி வருகிறது.

30,000 கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பது அவர்களே ஒத்துக் கொண்டுள்ளார்கள், அதிமுக கோட்டை மதுரை என்பதற்கு நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை உறுதி செய்வோம்” என பேசினார்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வாய் பேச முடியாத 14 வயது சிறுமி.. வனப்பகுதிக்குள் நடந்த வன்புணர்வு : கோவையில் பகீர்!

கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…

16 minutes ago

டிரைலரும் ரெடி, மூணாவது சிங்கிளும் ரெடி! குட் பேட் அக்லி திரைப்படத்தின் மாஸ் அப்டேட்…

எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…

28 minutes ago

காதல் திருமணத்திற்கு காத்திருந்த இளம்பெண் கொலை… கடைசியாக பேசிய காதலன் : காத்திருந்த டுவிஸ்ட்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…

2 hours ago

விஜய் சேதுபதியை திட்டிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த சாந்தனு! அப்படி என்னதான் நடந்தது?

தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…

2 hours ago

கலவரத்தை தூண்டும் எம்புரான், இது திட்டமிட்ட சதி- பொங்கி எழுந்த சீமான்

அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…

2 hours ago

This website uses cookies.