மதுரை வளர்ச்சியடைய அதிமுகவே காரணம்.. தற்போது திமுக அரசு மெத்தனமாக உள்ளது : செல்லூர் ராஜு குற்றச்சாட்டு!
Author: Udayachandran RadhaKrishnan21 August 2022, 1:24 pm
அதிமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு திட்டங்கள் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு மதுரை வளர்ச்சி அடைந்து உள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரை வைகை நதி பாதுகாப்பு மக்கள் இயக்கம் சார்பில் வைகை நதி ஆரத்தி வழிபாடு பூஜை சிம்மக்கல் கல்பால மத்தியில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தனது மனைவியுடன் கலந்து கொண்டு வைகை நதிக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஆரத்தி எடுக்கும்போது சுவாமியை தரிசனம் செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை மனைவியுடன் இணைந்து சந்தித்தார்
வைகை ராஜன், பாண்டிய ராஜன் உள்ளிட்டோர் 2019 முதல் இந்த விழா நடைபெறுகிறது.
கடந்த 2019 முன்பு வைகை நதி வறண்டு கிடந்தது. தண்ணீர் எடுக்க 16 கீழ் தோண்டியும் நீர் கிடைக்காமல் நீரை எடுத்து வந்து இந்த விழாவை நடத்தினோம் அந்த விழாவிற்கு பிறகு தொடர்ந்து வைகை நதி பாய்ந்து ஓடுகிறது.
40 ஆண்டுகள் நிறையாத மாரியம்மன் தெப்பக்குளம் தற்போது ஓர் ஆண்டுக்கு மேலாக நீர் தேங்கி எழில்மிகு காட்சி அளிக்கிறது. மதுரை ஓர் ஆன்மிக நகரம் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
வைகையில் கழிவு நீர் கலப்பதை தடுக்க இரு பக்கம் 11 கிலோ மீட்டர் விரைவு சாலை அமைக்க அதிமுக ஆட்சியில் திட்டமிட்டு அது ஒருபகுதி நிறைவடைந்தது, இதனால் நகர்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்து உள்ளது. மற்றொரு பக்கம் இன்னமும் பணிகள் முடியவில்லை திமுக அரசு மெத்தனமாக செயல்படுகிறது என எனது மன வருத்தத்தை மதுரை மக்கள் சார்பில் தெரிவிக்கிறேன்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு திட்டங்கள் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு மதுரை வளர்ச்சி அடைந்து உள்ளது. முல்லை பெரியாறு அணையில் இருந்து அம்ருத் திட்டத்தின் கீழ் மதுரைக்கு நீர் கொண்டுவரும் திட்டம் விரைவில் முடியுமா என நான் சட்டமன்றத்தில் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்து இருக்கிறார் என கூறினார்.