தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய அதிமுக.. ஜெ., பிறந்தநாளில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 February 2024, 1:32 pm

தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி அதிமுக.. ஜெ., பிறந்தநாளில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை பசுமை வழி சாலையில் உள்ள இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதன்பின் செய்தியாளர் சந்திப்பின்போது எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கூட்டணி, பிரச்சாரம் உள்ளிட்டவை தொடர்பாக பேசினார்.

அவர் கூறியதாவது, மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை அதிமுக இன்று முதல் தொடங்கியுள்ளது. தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாடு காப்போம் என்ற முழக்கத்தை முன்னிறுத்தி அதிமுகவின் தேர்தல் பிரச்சாரம் முன்னெடுக்கப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அதிமுக கூட்டணியை அறிவிப்போம்.

பாஜகவுடன் அதிமுகவுக்கு ரகசிய உடன்பாடு எதுவுமில்லை என்றும் தமிழ்நாட்டில் எத்தனை முனை போட்டி என்பது தேர்தல் வந்ததால் தெரியவரும் எனவும் செய்தியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

தொடர்ந்து இபிஎஸ் கூறியதாவது, தேர்தல் களத்தில் அதிமுகவுக்கு எதிரி என்று யாரும் இல்லை. இந்த நன்நாளில் அதிமுகவை தேர்தல்களில் மகத்தான வெற்றி பெறச் செய்திட அனைவரும் அயராது உழைப்போம்.

அதேபோல், தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும் என்பதையும் உறுதிப்படுத்துவோம் எனவும் கூறினார்.

  • chiyaan vikram new movie title is maaveeran movie dialogue மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்?