நிர்ணயம் செய்த விலையை விட பீஸ்ட் படத்திற்கு கூடுதலாக கட்டணம் உயர்வு : அரசுக்கு அதிமுக பிரமுகர் கோரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2022, 11:06 pm

புதுச்சேரி : விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியாகவுள்ள புதுச்சேரி தியேட்டர்களில் அரசு அனுமதியின்றி 100 ரூபாய் கட்டணம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்ட திரையரங்கு மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கோரிக்கை வைத்துள்ளார்.

புதுச்சேரி அதிமுக கழக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் குறித்து அரசியல் ரீதியான விமர்சனங்கள் செய்யும்போது தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யக்கூடாது என்றும், விமர்சனங்கள் என்பது நாகரிகத்தோடு இருக்க வேண்டும். நாகரிகமுற்ற முறையில் முதலமைச்சர் ரங்கசாமி முதுகெலும்பு இல்லாதவர் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார்.

இதுபோல் விமர்சனம் செய்வதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். கூட்டணி ஆட்சிக்கு தலைமை தாங்கி நடத்திகொண்டிருக்கும் முதலமைச்சரின் ஆட்சி நீடிக்காது. அவரது நாட்கள் எண்ணப்படுகின்றன என்று கூறும் உரிமை நாராயணசாமிக்கு கிடையாது என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், விஜய் படம் வெளியாக உள்ள புதுச்சேரி தியேட்டர்களில் 5 தினங்களுக்கு அனைத்து ஷோக்களுக்கும் 100 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அரசின் அனுமதி இல்லாமல் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வைக்கப்பட்ட தியேட்டர் உரிமையாளர்கள் மீது மாவட்ட ஆட்சியர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தியேட்டர் மீது படம் திரையிட அனுமதி அளிக்க கூடாது என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கூறினார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1542

    0

    0