அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை… குற்றவாளிகளை ரவுண்டு கட்டிய போலீசார்…!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2023, 12:21 pm

அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை… குற்றவாளிகளை ரவுண்டு கட்டிய போலீசார்…!!!

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதேபோன்று சென்னை புறநகர் பகுதிகளில் பெரிய ரவுடிகள் மற்றும் குட்டி குட்டி ரவுடிகளின் அதிகரித்து வருகிறது.

காவல்துறையினரும் ரவுடிசத்திற்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவ்பொழுது காவல்துறையினர் மற்றும் ரவுடிகளுக்கிடையே நடைபெறும் மோதலின் பொழுது என்கவுண்டரில் பல ரவுடிகள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இருந்தும் போதை உள்ளிட்ட பழக்கங்களுக்கு அடிமையாகும் குட்டி ரவுடிகள் தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசியல் பிரமுகர்கள் மற்றும் வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிப்பது இந்த ரவுடிகளின் வழக்கமாக இருந்து வருகிறது.

இதன் காரணமாக ரவுடிகளுக்கிடையே சில சமயங்களில் மோதல் ஏற்படுவதும் , இதனால் பல இடங்களில் கொடூர கொலைகள் நடைபெறுவது அதிகரித்து வருகிறது.

சென்னையின் புறநகர் மாவட்டமாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் அதிமுக பிரமுகராக உள்ளார்.

இவர் வேங்கடமங்கலம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராக இருந்துள்ளார். இவரது மனைவி கல்யாணி தற்பொழுது ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். இதேபோன்று அவரது மகன் அன்பரசு (34) ஒன்பதாவது வார்டு உறுப்பினராகவும் உள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு நண்பர்களோடு கீழப்பாக்கம் அருகே உள்ள சுடுகாடு பகுதியில் காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல் அன்பரசு சென்ற காரை வழிமறித்து இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் வீசி உள்ளனர்.

அப்போது காரில் இருந்தா அன்பரசு மற்றும் அவரது நண்பர்கள் காரிலிருந்து இறங்கி தப்பி ஓட முயன்ற போது ,மர்ம நபர்கள் அன்பரசு விரட்டி துரத்திச் சென்று அறிவாளால் கைகால் தலை என பல்வேறு இடங்களில் சரமாரியாக பெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த அன்பரசு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காயார் போலீசார் அன்பரசு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தப்பியோடிய மர்ம கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்று சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகளின் பட்டியல்கள் அவர்களின் குற்றச்சம்பவங்களை அடிப்படையில் வகை பிரிக்கப்பட்டு, ரவுடிகளின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் நண்பர்கள் உறவினர்கள் ஆகியவர்களின் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

குற்றச் செயலில் ஈடுபடுவதற்கு முன்பே பல ரவுடிகளை போலீசார் தடுத்து, கைது செய்யப்பட்டு குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து நிறுத்தியதாகவும் ,காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இருந்தும் சில சமயங்களில் முன்பாக உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதேபோன்று சென்னை புறநகர் பகுதிகளில் பெரிய ரவுடிகள் மற்றும் குட்டி குட்டி ரவுடிகளின் அதிகரித்து வருகிறது.

காவல்துறையினரும் ரவுடிசத்திற்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவ்பொழுது காவல்துறையினர் மற்றும் ரவுடிகளுக்கிடையே நடைபெறும் மோதலின் பொழுது என்கவுண்டரில் பல ரவுடிகள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இருந்தும் போதை உள்ளிட்ட பழக்கங்களுக்கு அடிமையாகும் குட்டி ரவுடிகள் தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசியல் பிரமுகர்கள் மற்றும் வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிப்பது இந்த ரவுடிகளின் வழக்கமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக ரவுடிகளுக்கிடையே சில சமயங்களில் மோதல் ஏற்படுவதும் , இதனால் பல இடங்களில் கொடூர கொலைகள் நடைபெறுவது அதிகரித்து வருகிறது.

  • Allu Arjun arrest and controversy பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
  • Views: - 519

    0

    0