அதிமுக பிரமுகர் கத்தியால் குத்திக் கொலை : ஒரு தலைக் காதலுக்கு இடையூறாக இருந்ததால் இளைஞர் செய்த கொடூரம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
29 August 2023, 5:45 pm

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி காவல் நிலையம் அத்திக்கடையைச் சேர்ந்தவர் சிராஜுதீன் (வயது 58). இவர் அதிமுகவைச் சேர்ந்தவர். இவர் அத்திக்கடை ஜமாத் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அதே ஊரை சேர்ந்தவர் முகமது அசாருதீன் (வயது 32). இவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் சிராஜுதீனின் உறவினர் பெண் ஒருவரை முகமது அசாருதீன் ஒருதலையாக காதல் செய்து வந்துள்ளார்.

திருமணமான நிலையில் வேறொரு பெண்ணை காதலிக்கிறாரே என்றுகூறி அதனை சிராஜுதீன் தட்டி கேட்டுள்ளார். தனது காதலுக்கு இடையூறாக இருக்கிறார் என சிராஜுதீன் மீது அசாருதீன் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

எப்படியாவது சிராஜுதீனை கொலை செய்து விட வேண்டும் என திட்டம் தீட்டிய அசாருதீன், நேற்று நல்லிரவு கடைவீதி பகுதியில் மறைந்திருந்துள்ளார்.

அப்போது கடை வீதியில் இருந்து வீட்டுக்கு வந்த சிராஜுதீனை வழிமறைத்து கையில் வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தில் பலமுறை குத்தினார். இதில் நிலைகுலைந்த ரத்த வெள்ளத்தில் சிராஜுதீன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் கொரடாச்சேரி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்பொழுது சிராஜுதீனை கொலை செய்துவிட்டு முகமது அசாருதீன் கையில் கத்தியை எடுத்துக்கொண்டு சாவகாசமாக நடந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

இது தொடர்பாக சிராஜுதீனின் மகன் ரியாவுதீன் கொரடாச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து முகமது அசாருதீனை கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட சிராஜுதீனின் உடல் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
உறவுக்கார பெண்ணிடம் பழக வேண்டாம் என கூறியதால் அதிமுக உறுப்பினரை கொலை செய்த சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 425

    0

    0