‘பாவமுங்கோ பாவமுங்கோ கோவை மக்கள் பாவமுங்கோ’: சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு…கருப்பு உடையில் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக கவுன்சிலர்கள்.!!

Author: Rajesh
11 April 2022, 11:18 am

கோவை: தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்தும் விதமாக கருப்பு சட்டை அணிந்து அதிமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த கோவை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் சர்மிளா சந்திரசேகர், பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் தமிழக அரசின் சொத்து வரி உயர்விற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு முன்னதாக விக்டோரியா ஹால் முன்பு, மூவரும் கண்டன பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் வைத்திருந்த கண்டன பதாகையில் கொங்கு தமிழில் “உயர்த்தாதீங்கோ உயர்த்தாதீங்கோ சொத்து வரியை உயர்த்தாதீங்கோ, பாவமுங்கோ பாவமுங்கோ கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் பாவமுங்கோ” என்ற வாசங்கள் இடம்பெற்றிருந்தன.

  • Perarasu Criticized Vijay about his TVK 2nd Year Event கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!