திருப்பூரில் திரண்ட அதிமுகவினர் : திமுக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 March 2023, 3:53 pm

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி மீது மதுரையில் அமமுக நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில் திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக மாநகர மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார் , எம்.எஸ்.எம் ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

  • cooku with comali season 6 new judge chef koushik இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!