முதன்முறையாக வெள்ளை நிற சட்டையில் அதிமுக உறுப்பினர்கள் : கோவையில் நடந்த 5வது மாமன்ற கூட்டத்தில் சுவராஸ்யம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 July 2022, 2:36 pm

கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் 5 வது மாநகராட்சி சாதாரண மாமன்ற கூட்டம் இன்று நடைபெறுகிறது. கோவை மேயர் கல்பனா ஆந்த்குமார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இது கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோரும் கலந்து கொண்டு மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்தனர்.

இக்கூட்டத்தில் இரண்டு மாத சஸ்பெண்ட் முடிந்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர். இதில் இந்த மாமன்ற கூட்டத்தில் கருப்பு சட்டை அணியாமல் வெள்ளை நிற உடையுடன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டது இது முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!