முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வந்த காரை வழிமறித்த அதிமுகவினர்.. நொடியில் நடந்த சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
1 May 2024, 1:26 pm

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வந்த காரை வழிமறித்த அதிமுகவினர்.. நொடியில் நடந்த சம்பவம்!

பழனியில் அதிமுக சார்பில் பட்டத்து விநாயகர் கோவில் அருகே நீர்பந்தல் திறக்கும் விழா அதிமுக துணை பொது செயலாளரும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நத்தம் விஸ்வநாதன் தனது காரில் கிளம்பிய போது அதிமுக நகர செயலாளர் முருகானந்தம் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ரவி மனோகரன் மாவட்ட மாணவரணி செயலாளர் அன்வர்தீன் உள்ளிட்ட நிர்வாகிகள் நத்தம் விஸ்வநாதன் காரை முற்றுகையிட்டு ஒருவரை ஒருவர் குறை கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் தகாத வார்த்தைகளை கூறிக்கொண்டு மாறி மாறி தாக்கிக் கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க: ஏற்காடு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ₹10 லட்சம் வழங்குக.. திமுக அரசுக்கு EPS வலியுறுத்தல்!

உடனடியாக அங்கிருந்து நத்தம் விஸ்வநாதன் தனது காரில் கிளம்பிச் சென்றார். பழனி அதிமுக நகர செயலாளர் முருகானந்தம் குறித்து தவறான தகவலை அதிமுக பிரமுகர் ஒருவரே தனது நண்பர் மூலம் சமூக வலைதளங்களில் பரப்பியதால் இக் குழப்பம் ஏற்பட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 358

    0

    0