ஈரோடு தேர்தலில் திமுகவுக்கு ஓட்டு போட்ட அதிமுகவினர்.. அமைச்சர் சொன்ன காரணம்!
Author: Udayachandran RadhaKrishnan15 February 2025, 2:36 pm
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அண்ணா அறிவாலய செங்கல்களை அகற்றுவேன் என்று அண்ணாமலையின் பேச்சு இதைப்போல முட்டாள்தனமான பேச்சு இருக்க முடியாது.
எங்களைத் தொடக்கூட முடியாது. அண்ணா அறிவாலயத்தில் நுழைய கூட முடியாது. அண்ணா அறிவாலயம் சட்டப்படி முறைப்படி நன்றாக கட்டப்பட்டுள்ளது. அனுமதி பெற்று கட்டப்பட்டுள்ளது
அண்ணாமலை அல்ல அவரது தாத்தாவே வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. இது அவருக்கும் நன்றாக தெரியும். அங்குள்ள செங்களை அல்ல சிறுபில்லை கூட புடுங்குவதற்கு வாய்ப்பு கிடையாது. நாங்கள் அனுமதித்தால் தான் அவர் உள்ளே வர முடியும்…
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு ஒய்பிரிவு பாதுகாப்பு வழங்கியதில் மாநில அரசை ஒன்றிய அரசு ஆலோசனை செய்ய வேண்டும் என்று அவசியம் கிடையாது. இது சோதனைக்காகவா? அங்கு யார் யார் வருகிறார்கள் என்று பார்ப்பதற்காகவா? அந்த மீனை தங்களுடைய வலையில் சிக்க வைப்பதற்காகவா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்…
செங்கோட்டையன் தனது மன வருத்தத்தை தான் தற்போது பேசி வருகிறார். அவரை திமுக இயக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. அதிமுக கட்சி என்பது இதோடு முடிந்துவிட்டது. 2026ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக வாக்கு சதவீதம் என்பது எவ்வளவு என்று தெரியவரும்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் திமுக சின்னத்தில் இன்று வெற்றி பெற்ற எம்எல்ஏ ஆக உள்ளார் அவர் கேட்கும் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது எனவே அவர் திமுக கூட்டணியை விட்டு போக மாட்டார் என்று நம்பிக்கை உள்ளது
திமுக செயல் பெண்களுக்கு அதிகமான பாதுகாப்புகள் உள்ளது புகார் அளிக்க அதனால் தான் பெண்கள் தைரியமாக முன் வருகிறார்கள்
அதிமுக தொண்டர் இரட்டை இலையைத் தவிர வேறு யாருக்கும் வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வாக்கு திமுகவிற்கு வந்துள்ளது .அதை நாங்கள் வரவேற்கிறோம் அதிமுக நிர்வாகிகள் உணர்ந்து விட்டனர் தங்களுடைய தலைமைச் சரி இல்லை என்று. இவ்வாறு அவர் பேசினார்.