எதுவும் பேசாமல் போயஸ் கார்டனில் ஓய்வெடுத்தால் உங்களுக்கு மரியாதை : சசிகலா குறித்து அதிமுக எம்எல்ஏ காட்டம்!!
Author: Udayachandran RadhaKrishnan20 July 2024, 2:29 pm
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் மஹாலில் அதிமுக புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கலந்துகொண்டு அதிமுக தொண்டர்களிடம் உரையாற்றினார்.
திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:
இந்த அரசு மின்சார கட்டணத்தை மூன்றாவது முறையாக உயர்த்தி இருக்கிறது. திரும்பப் பெரும் வரை போராடுகிற நிலை உருவாகியிருக்கிறது. இந்த முறையும் இந்த அரசு வீழ்வதற்கு மின்சார கட்டணம் ஒரு காரணமாக உள்ளது.
குறிப்பாக அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற செய்தி பல நாடு முழுவதும் பரவி வருகிறது. சொன்னால் பாதுகாப்பு இல்லையா என்கிற அவளை சூழல் தான் நிலவுகிறது. நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒரு அமைச்சர் இல்லத்திற்கு முன்பாக ஓட வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கிறார். அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க இந்த அரசு தவறி இருக்கிறது. இந்த ஜூலை மாதத்தில் மதுரையில் மட்டும் 11 கொலைகள் நடந்துள்ளது.
சசிகலா சுற்றுப்பயணம் குறித்த கேள்விக்கு: அவர் ஒரு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அவர் மீது மரியாதை வைத்திருந்தோம். அதை மறுக்க முடியாது. அதிமுகவை கெடுக்கிற போது அதை கண்டிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு உள்ளது. அண்ணா வெற்றி பெற்ற போது பெரியாரை சந்தித்து வாழ்த்து பெற்றதை போல எடப்பாடி யார் வெற்றி பெற்று முதல்வராகிய பிறகு அவரை சந்தித்து ஆசி பெரும் சூழ்நிலை உருவாகும். ஆனால் அவர் சுற்றுப்பை பயணம் மேற்கொண்டிருப்பது விளையாட்டுத்தனம் என்பது வேடிக்கையாக பார்ப்பதா என்று தெரியவில்லை. சசிகலா மட்டுமில்லை ஓபிஎஸ் டி டிவி என அனைவரும் தென்காசியில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை நோக்கி தான் பாய்கிறார்கள். அதிமுக சமுதாயத்தை மட்டும் வைத்து அல்ல. இந்த சமுதாயத்தில் இருந்து நாங்கள் நிறைய பேர் தற்போது அதிமுகவில் பணியாற்றி வருகிறோம். எனவே அவர்களை இவர்கள் சந்திப்பதால் முத்துராமலிங்கத் தேவராகிவிடப் போவதில்லை. அவர் சுற்றுப்பயணத்தில் அதிமுக தொண்டர்கள் யாரும் இல்லை.
சசிகலா அவர்கள் ஒருமுறை பொதுச் செயலாளர் பதவியை போட்டுக் கொண்டார் அதை தடுப்போம் என்று கூறியதற்கு அவருக்கு உரிய மரியாதையை கொடுப்போம், அதன் மீது வழக்கு போடுகிற சூழலை தடுப்போம் என்று எடப்பாடி யார் சொன்னார். ஆனால் அவர் இன்று அவர் அதிமுகவிற்கு கேடு விளைவிக்க வேண்டும் என்று நினைக்கிற போது எங்களைப் போன்ற தொண்டர்கள் வழக்கு தொடுத்து அவர் பொதுச் செயலாளர் என்று போடுவதில் கட்சிக்கொடியை பயன்படுத்துவதையும் தவிர்ப்போம். அவர் போயஸ் கார்டனில் ஓய்வு எடுத்தால் எங்கள் மரியாதை இருக்கும். அதை விடுத்து இப்படி சிறுபிள்ளைத்தனமாக அடுத்தவர் தூண்டுதலின் பேரில் செய்வதை அதிமுக தொண்டர்கள் பொறுக்க மாட்டார்கள்.
நானும் சசிகலாவும் கட்சியில் சேர யாரிடமும் யாசகம் கேட்கவில்லை என ஓபிஎஸ் கூறியது குறித்த கேள்விக்கு:
டிடிவி போல அவர்கள் ஆளுக்கு ஒரு கட்சி நடத்தட்டும். ஓபிஎஸ் தனியாக கட்சி நடத்தினால் நாங்கள் தடுக்க போவதில்லை. 2021இல் நானே அரசியலை விட்டு விலகுவதாக கூறிவிட்டு தற்போது சுற்றுப்பயணம் செல்கிறார். என்ன பயணத்தில் ஆன்மீகப் பயணமா, சமுதாய பயணமா எதற்காக செல்கிறார்.
திமுகவில் கூட்டணியில் இருப்பவர்கள் எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் இருக்கிறார்கள். இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் கார்த்திக் சிதம்பரம் மிகத் தெளிவாக பேசியிருக்கிறார். அதைக் கேட்டால் காங்கிரஸ் கட்சி நீண்ட நாள் திமுக இருக்காது, அதற்கான வாய்ப்பு இல்லை. எங்களுக்கு நாங்களே வலுவாக தான் இருக்கிறோம் என கூறினார்.