ஆட்சி மாறிய பின் அதிமுக திட்டம் எல்லாமே பாதியோடு பாதியா நிக்குது : பட்டியல் போட்டு அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
22 November 2022, 6:11 pm

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

தமிழக முதல்வர் அறிவித்துள்ளபடி சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் முக்கிய திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை மனுவாக அளிக்கும்படி உத்தரவுவிட்டார்.

அதன் அடிப்படையில் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் அதிமுக எம்எல்ஏவான பொள்ளாச்சி ஜெயராமன் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் ராசிபலன் ஊராட்சி இந்திரா எம்ஜிஆர் நகர் பகுதியில் தார் சாலை அமைத்திடவும், மேலும் பொன்னாயூர் ரோடு முதல் சிங்காநல்லூர் ரோடு வரை சாலைகள் அமைத்து தர வேண்டியும் புதிய அம்பராம்பாளையம் பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு பைப்புகளை பதிப்பதற்காக சாலைகள் தோண்டப்பட்ட நிலையில் உடனடியாக சரி செய்ய வேண்டுமாறு கோரிக்கை மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட பகுதியில் சாலைகள் மற்றும் பாலங்கள் அமைத்து தரக்கோரி மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!