பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு கொடுத்த அதிமுக எம்எல்ஏ : ஆ ராசாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என தளவாய் சுந்தரம் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2022, 4:42 pm

ஆ.ராசாவை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரை குளம் கிராம மக்கள் மற்றும் பா.ஜ.க வினர் ஒன்றிணைந்து அவரது இந்து விரோத பேச்சுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இந்து மதம் சார்ந்து பேசும்போது அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் அவர் பேசிய பேச்சு தற்போது பெரும் சர்ச்சை ஆகியுள்ளது.

ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு முழுவதும் கடும் கண்டனம் பா.ஜ.க மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் கண்டன போராட்டம் நடந்து வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரை குளம் பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் அதிமுகவினர், பாஜகவினர், பல்வேறு சமூகத்தினர் ஆர்.ராசாவின் இந்து விரோத பேச்சுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, மேலும் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என் தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில்”திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் இந்துக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது மேலும் ஆ. ராசாவின் இந்த பேச்சானது கண்டனத்துக்குரியது.

அவர் கைது செய்யப்பட வேண்டும் மேலும் அவரை திமுகவில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக பேசினார். ஆர்ப்பாட்டத்தில் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய கழக செயலாளர் ஜெசிம், தென் தாமரை குளம் பேரூர் கழகச் செயலாளர் தாமரை தினேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

  • vetrimaaran give voice over for harish kalyan diesel movie ஹரிஷ் கல்யாண் படத்தில் வெற்றிமாறனின் இன்னொரு அவதாரம்? வேற லெவல்ல இருக்கப்போது…