கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழாவில் அதிமுக எம்எல்ஏக்கு இருக்கை : பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2022, 10:51 am

கோவை ஈச்சனாரி பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அனைவரது உடைமைகளும் சோதனை செய்யப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் உடல் வெப்பநிலையும் சோதனை செய்யப்பட்டு முக கவசங்களும் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

மேலும் நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. விழா நடக்குமிடம் கிணத்துக்கடவு தொகுதி என்பதால், அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., தாமோதரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதோடு, முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Simran Slams Actress Talked About Aunty Roles Aunty கேரக்டருக்கு இது எவ்வளவோ மேல்… சிம்ரனை காயப்படுத்திய நடிகை இவரா?