அந்த தியாகி யார்? டாஸ்மாக் ஊழல் தொடர்பாக கவனத்தை ஈர்த்த அதிமுக எம்எல்ஏக்கள்!
Author: Udayachandran RadhaKrishnan7 April 2025, 10:41 am
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற பேட்ஜ்அணிந்து வருகை புரிந்துள்ளனர்.
டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இது திமுக அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், சட்டப்பேரவையில் கவனத்தை ஈர்க்கும் வகையில் அதிமுகவினர் அந்த தியாகி யார்? என்ற பேட்ஜ் அணிந்து வந்துள்ளனர்.