முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய அதிமுக எம்பி சிவி சண்முகம் : நீதிமன்றம் போட்ட பரபரப்பு உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
9 October 2023, 4:01 pm

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய அதிமுக எம்பி சிவி சண்முகம் : நீதிமன்றம் போட்ட பரபரப்பு உத்தரவு!!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைடுத்த நாட்டார் மங்கலத்தில் கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திலும் 10 ஆம் தேதி ஆரோவில் அருகே நடைபெற்ற கூட்டதிலும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் எம்.பி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் தமிழக அரசையும், தமிழக முதல்வரையும், தரக்குறைவாகவும் அவதூறாகவும் விமர்சித்து பேசியதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும், குற்றவியல் நீதிமன்றத்திலும் அரசு வழக்கறிஞர் சுப்பரமணியம் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கில் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் நேரில் ஆஜராகும்படி நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்ட நிலையில் இன்றைய தினம் சிவி சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜராகினார். பின்னர் வழக்கு விசாரனையை நவம்பர் 6 ஆம் தேதிக்கு நீதபதி பூர்ணிமா ஒத்திவைத்தார் .

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்