அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி? ஓபிஎஸ் சொந்த ஊரில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
6 June 2022, 6:04 pm

தேனி : பெரியகுளத்தில் எடப்பாடி அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி என்பது மிக உயரிய பதவியாக கருதப்பட்டது. குறிப்பாக முதல்வராகவும் பொதுச்செயலாளரும் எம்ஜிஆருக்கு பின் ஜெயலலிதா இருந்தார்.

அதன் பின் கட்சியை வழிநடத்துபவர் யார் என்ற பிரச்சனை அதிமுகவில் ஏற்பட்டது. இதையடுத்து பொதுச்செயலாளர் பதவியை நீக்கி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கி, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அந்த பதவியில் பொறுப்பேற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அம்மா நல்லாசியுடன் விரைவில் அஇஅதிமுக நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வாழ்த்தி வணங்குகின்றேன் என பெரியகுளம் சுரேஷ் என்பவர் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரியகுளம் முன்னாள் முதல்வர் ஆதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் சொந்த ஊரில் அதிமுகவின் எடப்பாடி கே பழனிச்சாமி பொதுச் செயலாளராக போஸ்டர் ஒட்டி இருப்பதால் பெரியகுளம் பகுதியில் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு காணப்படுகிறது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!