கோவை : வேட்பு மனுவுக்கு அதிகாரிகள் பல்வேறு ஆவணங்களை கேட்பதாகவும், காவல்துறையை வைத்து இந்த தேர்தலை திமுக நடத்தி வருவதாகவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவையில் திமுக.,வினர் அராஜகத்தில் ஈடுபடுபடுவதாகவும், வேட்பாளர் மனு தாக்கல் செய்யும் போது புதிய உத்தரவுகளை போட்டு மனுவை நிராகரிக்க பார்ப்பதாகவும் கூறி மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் மனு அளித்தனர்.
தொடர்ந்து அண்ணா சிலை பகுதியில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறியதாவது: திமுகவினர் எங்களை பழி வாங்குகின்றனர். அதற்க்காகவே அவர்கள் தங்களை தினம் தினம், தீட்டி வருகின்றனர். என்ன வழக்கை, எங்கள் மீது பதிவு செய்தலும், அதனை தேர்தலின் போது, தூசி தட்டி எடுத்து என்னை விசாரணைக்கு அழைப்பார்கள். திமுகவினர் காவல்துறையினரை வைத்துதான் தேர்தலை சந்திக்கின்றனர்.
நாங்கள் ஆளும் கட்சியாக இருந்தபோது, எங்களை திமுகவினர் அளவுக்கு அதிகமான விமர்சனங்களை, பத்திரிக்கையாளர்கள் மூலமாக செய்தனர், நாளங்கள் அதனை பற்றியெல்லாம் கவலைப்படாமல் மக்கள் பணியாற்றுவதை வாடிக்கையாக கொண்டு இருந்தோம், ஆனால் தற்போது திமுகவினர் செய்வது வன்மையாக கண்டிக்க கூடியது.
இது ஜனநாயக படுகொலை. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தற்போது தேர்தல் அதிகாரிகள் செயல்படுகின்றனர். ஆளும் கட்சியாக இருப்பவர்கள் திட்டங்களை சொல்லி வாக்கு கேளுங்கள், எதிர்கட்சியினரை காட்டி வாக்கு கேட்காதீர்கள்.
கோவையை பொறுத்தளவில் கோவை அதிமுக கோட்டை இதனை எத்தனை நபர்கள் வந்தாலும், உடைக்கமுடியாது, உள்ளாட்சி தேர்தலிலும் உறுதியாக வெற்றி பெற்று, மேயர் உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் அதிமுக கைப்பற்றும் என்பது உறுதி.
கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடியார் முதல்வராக இருந்த போது, கோவையின் வளர்ச்சி பணிகள் வேகமாக பணிகள் நடைபெற்றன, ஆனால் தற்போது அனைத்து பணிகளும் மந்த நிலையில் உள்ளது இதனை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தற்போது திமுக ஆட்சியில் எங்கேயும் குப்பை எடுக்கவில்லை தண்ணீர் முறையாக விநியோகம் இல்லை போன்ற சூழல் உள்ளது இது கண்கூடாக பார்க்க முடிகின்றது. தற்போது நடைபெறும் திமுக ஆட்சியினை கன்டித்து கோவையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பாக முக்கியமான கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் இன்று கொடுத்துள்ளோம். மாவட்ட கலெக்டர் இது குறித்து நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது தேர்தல் அதிகாரிகள், வேட்புமனு தாக்கலுக்கு பல்வேறு ஆவணங்கள் கேட்கின்றனர் .
இன்சியல் போடுவதிலும் பல்வேறு விதிமுறைகளை கொண்டு வந்துள்ளனர், இதெல்லாம் ஏற்று கொள்ளும் வகையில் இல்லை. இதற்க்கு இங்கு உள்ள காவல்துறையினரும் உறுதுணயாக இருக்கின்றது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் அம்மன் கே அர்ஜூனன், பிஆர்ஜி அருண்குமார், கே. ஆர்,ஜெயராமன், சே. தாமோதரன், முன்னாள் எம்பி ஏகே செல்வராஜ், மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.