சந்தி சிரிக்குது, சந்தி சிரிக்குது ஸ்டாலின் ஆட்சியிலே.. திமுகவை கண்டித்து அனல் பறக்க விட்ட முன்னாள் அமைச்சர்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 July 2023, 11:57 am

அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்டம் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் இணைந்து தூத்துக்குடி வி.வி.டி சிக்னலில் தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர்

தூத்துக்குடியில் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டு தியாகிய விளைவுகளை கட்டுப்படுத்த வேண்டிய திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மோகன், சின்னப்பன் கழக அமைப்புச் செயலாளர் சின்னதுரை, மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல் முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் தட்டார் மடம் ஞானப்பிரகாசம்,முன்னாள் நகர் முன்னாள் நகர் மன்ற தலைவர் இரா.ஹென்றி, முன்னாள் மேயர் அந்தோணிக்கிரேசி, மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா மந்திரமூர்த்தி, மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 301

    0

    0