2024ல் மீண்டும் அதிமுக ஆட்சி… அமித்ஷாவை சந்தித்த பின் இபிஎஸ் பகிர்ந்த தகவல்.. திகைப்பில் திமுக!!!

Author: Udayachandran RadhaKrishnan
15 September 2023, 9:44 pm

2024ல் மீண்டும் அதிமுக ஆட்சி… திமுக வயிற்றில் புளியை கரைத்த எடப்பாடி பழனிசாமி!!!

சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்.
திமுக ஆட்சியில் போதைப்பொருள் நடமாட்டம், கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளது. அதிமுக ஆட்சியில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1000 வழங்கப்பட்டது. திமுக அரசு இரண்டரை ஆண்டுகளில் ரூ.2.73 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் கண்டிப்பாக வரும். அதிமுக தொண்டர்கள் தயாராக வேண்டும். ஒரே நாடு ஒரு தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டால் தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும். மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும்; இப்போது மின் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…