Categories: தமிழகம்

பாஜக ஆளாத மாநிலங்களுக்கு ஆபத்து… திமுக அரசுக்கு திடீர் ஆதரவாக பேசிய அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி!!

பாஜக ஆளாத மாநிலங்களுக்கு ஆபத்து… திமுக அரசுக்கு திடீர் ஆதரவாக பேசிய அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி!!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே லக்கமத்தனப்பள்ளி கிராமத்தில் மார்கண்டேயன் ஆற்றில் இருந்து படேதாள ஏரிக்கு செல்லும் பாசன கால்வாய் 57 லட்சம் ரூபாய்யில் புனரமைப்பு பணியை அதிமுக துணை பொது செயலாளர், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே பி முனுசாமி பூமி பூஜை செய்து துவங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, மார்கண்டேயன் ஆற்றில் இருந்து படேதாள ஏரிக்கு செல்லும் கால்காய் சீரமைக்க 57 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் துவங்கி வைத்துள்ளேன்.

கிருஷ்ணகிரியில் பாதயாத்திரையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரதமர் நரேந்திர மோடியை காமராஜருடன் ஒப்பிட்டு பேசி உள்ளார் – பிரதமர் மோடி மற்றும் தற்போது உள்ள கற்கால தலைவர்கள் யாரும் காமராஜருடன் ஒப்பிட்டு பேசி முடியாது – காமராஜர் மிகப்பெரிய கருமவீரர் மக்களுக்காக வாழ்ந்தவர். சுதந்திர போராட்ட தியாகி அவருடன் ஒப்பிடு செய்யக்கூடாது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து தமிழக – உ.பி. நிதி ஒதுக்கீடு பற்றி பேசி உள்ளார் – நான் அண்ணாமலையிடம் கேட்கிறேன் பிரதமர் ஒரே நாடு ஒரே தேசம் என்றும் சொல்லும் பாஜக தலைவர்கள், எல்லாம் மாநிலத்தில் முதலமைச்சர்கள் நடத்தும் மாநாட்டில் கலந்துகொண்டு தொழில் முனைவோர்களை அழைத்து இங்கு தொழில் தொடங்குங்கள் பாதுகாப்பான மாநிலம் என்று சொல்லி இருந்தால் உண்மையில் அண்ணாமலை பேசுவதை வரவேற்று இருப்பேன் மாறாக பிரதமர் குஜராத் சென்று தொழில் முதலீட்டாளர்களை பேசி அங்கிருந்து அனுப்புகிறார் நாட்டின் பிரதமர் ஒரு சிறிய வட்டத்திற்குள் அமர்ந்து விடுகிறார் இதைப்பற்றி பேச அண்ணாமலைக்கு தார்மீக உரிமை இல்லை.

திராவிட கட்சிகளால் தான் ஊழல் இருப்பதாக அண்ணாமலை பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 50 ஆண்டுகால ஆட்சியில் குறிப்பாக எம்ஜிஆர் ஜெயலலிதா எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக் காலத்தில் தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக விளங்கியுள்ளது பாஜக ஆட்சியில் சிறந்த மாநிலம் என தமிழகம் பல்வேறு சான்றிதழ்களை பெற்றுள்ளது. அதை மறைத்து தான்தோன்றித்தனமாக அண்ணாமலை பேசுவது அரசியல்வாதிகளை விமர்சனம் செய்வது நாகரீகமான அரசியல் இல்லை. காவல்துறையில் இருப்பவர்கள் எல்லாவற்றையும் குற்றவாளிகளாகவே பார்ப்பார் அது போல் பார்க்கிறார் அண்ணாமலை.

ராமர் திருக்கோவில் கும்பாபிஷேகம் பற்றி அரசியல் பேச அதிமுகவிற்கு விருப்பமில்லை – உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் பதவி வழங்குவதன் மூலம் வாரிசு அரசியல் தேவைப்பட்டால் முதலமைச்சர் உடல் நலம் கருதி முதலமைச்சர் பதவி கூட உதயநிதிக்கு வழங்கலாம் ஆனால் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் இதனை தூக்கி எறிவார்கள்.

திமுகவில் உள்ளவர்கள் தற்போது அதிமுகவில் இணைந்து வருகின்றனர் அதற்கு காரணம் திமுகவும் மீது வைத்திருந்த நம்பிக்கை இழந்து விட்டார்கள். அதிமுகவின் மீது உள்ள நம்பிக்கையால் இணைகிறார்கள்.

நாடாளுமன்ற கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது முடிந்த பிறகு ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும் தற்போது ஏதும் சொல்ல முடியாது.

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் கருணையால் அமைச்சர் முதலமைச்சர் போன்ற பதவிகள் பெற்றார். இந்த இயக்கத்தின் நலனில் அக்கறை காட்டாமல் சுயநலத்திற்காக செயல்பட்டதால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் கட்சிக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு தொல்லை கொடுத்து வருகிறார்.

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அதிமுகவின் இயற்கை சக்தியை வலுவலுக்க செய்ய வேண்டும் என்பதற்காக செயல்படும் துரோகி. நீதிமன்றம் பலமுறை தவறு தலையில் கொட்டியும் நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். தொண்டர்கள் இல்லாத இயக்கத்தை மீட்போம் என ஓபிஎஸ் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

தமிழக வெள்ள பாதிப்புகள் மத்திய அரசு நிதி ஒதுக்காதது பற்றி மத்திய அரசு மற்றும் பிரதமர் ஏற்கனவே நிதி ஒதுக்கி விட்டதாக தெரிவித்துள்ளனர். மத்திய அரசு பிரதமர் மற்றும் அவர்கள் பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காமல் வஞ்சித்து வருகிறது என்பதுதான் எதார்த்தமான உண்மை.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மாசி மாத இறுதியில் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 12) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 45 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 65…

6 minutes ago

கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!

தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…

13 hours ago

தறிகெட்டு ஓடும் ‘டிராகன்’…மொத்த வசூல் இத்தனை கோடியா.!

காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…

13 hours ago

டி.ராஜேந்திரனுக்கு என்ன ஆச்சு…ஆளே அடையாளம் தெரியல..வைரலாகும் போட்டோ.!

டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…

14 hours ago

வெறி நாய் கடிக்கு சிகிச்சை எடுத்த இளைஞர் உயிரை மாய்த்த சோகம் : கோவை அரசு மருத்துவமனையில் ஷாக்!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…

15 hours ago

பாக்ஸ் ஆபீஸ் சம்பவம் ரெடி மாமே…வெளிவந்த குட் ‘பேட் அக்லி’ அப்டேட்.!

பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…

15 hours ago

This website uses cookies.