இதெல்லாம் ஓவரா தெரியல… பாஜக கூட்டணி வேண்டுமென்றால் தாமரை சின்னத்தில் அதிமுக போட்டியிடணுமாம் : கே.பி ராமலிங்கம் கண்டிஷன்!

Author: Udayachandran RadhaKrishnan
16 February 2024, 1:22 pm

இதெல்லாம் ஓவரா தெரியல… பாஜக கூட்டணி வேண்டுமென்றால் தாமரை சின்னத்தில் அதிமுக போட்டியிடணுமாம் : கே.பி ராமலிங்கம் கண்டிஷன்!

நாமக்கல் மாவட்டம் அத்தனூர் அருகில் சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாநில துணைத்தலைவரரான கே.பி.ராமலிங்கம் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த கே.பி.ராமலிங்கம் “டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் தற்போது தேவை இல்லாத போராட்டமாக இருக்கிறது.

இந்த விவசாயிகள் போராட்டம் அரசியலுக்காக நடைபெறும் போராட்டம். மேலும், இந்த விவசாயிகளின் போராட்டம் மத்திய அரசின் எதிரியாக உள்ள காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் சொறி, சிரங்கு, அரிப்பாக உள்ளது என கூறினார்.

மேலும், தொடர்ந்து பேசிய அவர் அதிமுகவுடன் கூட்டணி சேர வாய்ப்பு இருக்கிறதா ? என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு, “எனக்கு தெரியவில்லை, அவர்கள் வேண்டாம் என்றார்கள், நாங்களும் வேண்டாம் என்றோம். அதிமுக, பாஜகவோடு கூட்டணி வைக்க வேண்டுமென்றால் அதிமுக தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும்” என்று பதிலளித்தார்.

  • Monalisa Bose viral at Kumbh Mela மகா கும்பமேளாவில் வைரலான இளம் பெண்…அழகில் மயங்கிய பிரபல இயக்குனர்…தட்டி தூக்கிய பாலிவுட்..!