Categories: தமிழகம்

அண்ணாமலை எதுக்கு இதெல்லாம்?.. உங்களோட கோல்மால் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்தாச்சு.. விளாசிய அதிமுக பிரபலம்!

அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி. திமுகவை திட்டினால் அண்ணாமலைக்கு கோபம் வருகிறது என அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில அவைத்தலைவர் ராமச்சந்திரன் பேட்டியளித்துள்ளார்.

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில அவைத்தலைவர் ஜி. ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எடப்பாடி பழனிச்சாமியை அவதூறு பேசி வருவது குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் குறித்து அதிமுக எடுத்துரைத்தால், அதற்காக அண்ணாமலை வக்காலத்து வாங்குவதாகவும், தமிழகத்தில் நடைபெறும் இந்த கேலிக்கூத்தை பார்க்கும் பொழுது அண்ணாமலை ஒரு கோமாளி என நிறுபனம் ஆகிறது என்றார்.

எம்ஜிஆ என்ற மாபெரும் தலைவர் உலகம் அறிந்தவர். அப்படிப்பட்ட எம்ஜிஆர்க்கு ருக்கு நாணயம் வெளியிட்டதில், இந்திய அரசுக்கு தான் பெருமை சேர்ந்துள்ளது என்றார்.
தமிழகத்தில் அனைத்து கட்சிகளும், நாகரீக அரசியல் செய்து வருவதாகவும். அன்பு, நாகரிகம் நிறைந்த மண் தமிழகம் என்றார்.

பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற பண்பை அண்ணாமலை அவரது குடும்பத்தார் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்,அரவங்குருச்சியில் ஜெயிக்க வைக்க வேண்டும் என இபிஎஸ் இடம் கைகூப்பி கும்பிட்டவர் அண்ணாமலை எனக் குறிப்பிட்டார்.

பாஜக உறுப்பினர்களை மட்டும் தான் கும்பிட்டு ஏமாற்ற முடியும், தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என தெரிவித்தார். பிரதமர் மோடி தமிழகம் வந்த போதெல்லாம் அவருக்கு எதிராக பல முன்னெடுப்புகளை திமுக செய்தது. இது கூட தெரியாமல் திமுகவின் நாணயம் வெளியீட்டு விழாவில், அண்ணாமலை அக்கட்சி நிர்வாகிகளை கும்பிடு போட்டு வழிந்ததாக தெரிவித்தார்.

திமுக அரசு ஆலோசனை வழங்கும் சுனில்லை, ரகசியமாக அண்ணாமலை சந்தித்தது ஏன்? என கேள்வி எழுப்பினார். பல ஊழல்களில் தழைத்து வரும் திமுகவை எதிர்க்கும் ஒரே கட்சி தமிழகத்தில் அதிமுக மட்டுமே என்றார். விவசாயி என மார்க்தட்டும் அண்ணாமலை, விளை நிலங்களை சைட் போட்டு விற்றுக் கோடிகளை சம்பாதித்து வருவதாக தெரிவித்தார். அரசியலில் சேர்ந்து குறுகிய காலத்தில், அண்ணாமலை இவ்வளவு சொத்து சேர்த்தது எப்படி? ஆடம்பர கார் வீடு போன்றவை வாங்குவதற்கு எங்கிருந்து பணம் வருகிறது என கேள்வி எழுப்பினார்.

அண்ணாமலை பணம், பணம் என்று அலைந்து கொண்டிருப்பதாகவும், என் மண் என் மக்கள் இயக்கம் மூலம் பண வசூல் செய்துள்ளதாக கூறினார். கடந்த எம்பி தேர்தலில், பண வசூல் செய்ததாக குற்றம் சாட்டினார். பாஜகவில் பல ரவுடிகளை உறுப்பினர்களாக சேர்த்து விட்டு அண்னாமலை பண வசூல் ஈடுபட்டதாக குறிப்பிட்டார்.

10 வருட பஜக ஆட்சியில், இந்திய கடன் அதிகரித்துள்ளதாகவும், தேர்தல் பத்திரம் மூலம் 6 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக கூறினர். அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில், பல மருத்துவம், பொறியியல், கலை கல்லூரிகல் திறக்கபட்டன என்றார்.
அத்திகடவு திட்டம், டெல்டா பாதுகாப்பு, ஆகிய பல திட்டங்கள் எடப்பாடி பழிச்சாமி முதல்வராக இருந்து செயல்படுத்தியது என்றார்.

முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தொழில் முதலீடுகள் இருக்க அமெரிக்கா செல்வது குறித்து கூறிய அவர், கடந்த சுற்றுப்பயணங்களில் இதுவரை ஒரு முதலீடு கூட தமிழகத்தில் செய்யப்படவில்லை என்றார். அவர் அமெரிக்கா செல்வது எதற்கு என்று அனைவருக்கும் தெரிந்தாலும் கூட, அவர் மீண்டும் தமிழகம் வரும் காலம் வரை மக்களை அதிமுக பத்திரமாக பார்த்துக் கொள்ளும் என்றார்.

Poorni

Recent Posts

25வது நாளை கடந்த ‘டிராகன்’.. தியேட்டரில் வசூல் ஆட்டம்..!

வெற்றிகரமாக 25 வது நாள் பிரதீப் ரங்கநாதன்,அனுபமா பரமேஸ்வரன்,கயாடு லோகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ‘டிராகன்’ திரைப்படம்,அஸ்வத் மாரிமுத்து…

13 minutes ago

கூட்டணிக்கு நாள் குறித்த தேமுதிக.. பிரேமலதா சொன்ன ‘அந்த’ வார்த்தை!

அடுத்த ஆண்டு மார்ச் 18ம் தேதி என்னுடைய பிறந்த நாள் அன்று பதில் சொல்வேன் என அதிமுக உடன் கூட்டணி…

33 minutes ago

‘கூலி’ படத்தில் இருந்து வெளியேறிய ரஜினி..வைரலாகும் வீடியோ.!

கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு! ரஜினிகாந்த் நடிப்பில்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு…

3 hours ago

பாஜக Vs தவெக.. விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய அதிமுக? பரபரப்பில் அரசியல் களம்!

தவெக - பாஜக அண்ணாமலை மோதல் நேற்று பூதாகரமாக வெடித்த நிலையில், அதிமுகவின் காயத்ரி ரகுராம் விஜய்க்கு ஆதரவாக கருத்து…

3 hours ago

நாகசைதன்யா மீது இருந்த கொஞ்ச, நஞ்ச பாசத்தையும் அழித்த சமந்தா.. வைரலாகும் புகைப்படம்!

நடிகை சமந்தா சினிமாவில் அறிமுகமான பின் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து முன்னணி நடிகையானார். நடிக்கும் போதே நாகசைதன்யாவுடன் காதல்…

4 hours ago

This website uses cookies.