ஆளுநர் தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்கும்… திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்த நிலையில் இபிஎஸ் அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
14 August 2024, 11:36 am

நாட்டின் 78வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது.. சுதந்திர தின விழாவையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, கவர்னர் மாளிகையில் அனைத்து கட்சிகளுக்கும் தேநீர் விருந்து வைக்க உள்ளார்.

இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி, தி.மு.க., அ.தி.மு.க. , காங்கிரஸ், பா.ஜ.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு கவர்னர் மாளிகை அழைப்பு விடுத்துள்ளது.

ஆளுநர் ஆர்.என். ரவியின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. அதன்படி , கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில், நாளை ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க உள்ளதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது. அ.தி.மு.க, சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் , பெஞ்சமின் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • kamal haasan not giving handshake to writer charu niveditha பொது வெளியில் அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்; ஒருத்தரை இப்படியா அவமானப்படுத்தனும்? அடப்பாவமே