தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகல்… பழனியில் பட்டாசு வெடித்து தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்!!
Author: Udayachandran RadhaKrishnan25 September 2023, 7:34 pm
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகல்… பழனியில் பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டம்!!
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதை தொடர்ந்து பழனி காந்தி மார்கெட் சாலையில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
தமிழகத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில் அதிமுகவினரும் அண்ணாமலைக்கும் வார்த்தை போர் நிலவி வந்தது.

இந்நிலையில் அதிமுக டெல்லிக்கு சென்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வரும் பிரச்சனைகள் குறித்து பேசியதை தொடர்ந்து இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது.
இதில் முனிசாமி பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை, இல்லை,இல்லை என்று மூன்று முறை கூறினார். அதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கும் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் பழனி காந்தி மார்க்கெட் சாலையில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராஜா முகமது தலைமையில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டும், பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதில் லயன்ஸ் அசோக், பாபு, எம். ஜி.ஆர் கருப்பசாமி,அபுதாஹிர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.