தலைமை தேர்தல் ஆணையரிடம் அதிமுக வைத்த முக்கிய கோரிக்கை : தமிழக அரசியல் கட்சிகள் அதிர்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
23 February 2024, 2:25 pm

தலைமை தேர்தல் ஆணையரிடம் அதிமுக வைத்த முக்கிய கோரிக்கை : தமிழக அரசியல் கட்சிகள் அதிர்ச்சி!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடர்பாக சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அங்கீகரிக்கப்பட்ட 10 அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி, திமுக, அதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்கிஸ்ட், பாஜக, தேசிய மக்கள் கட்சி, தேமுதிக ஆகிய கட்சி பிரதிநிதிகள் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

மக்களவை தேர்தல் தொடர்பாக ஒவ்வொரு கட்சி பிரதிநிதியுடனும் தனித்னியாக ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தங்களது கோரிக்கைகளை தலைமை தேர்தல் ஆணையரிடம் மனுவாக அளித்துள்ளோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தலைமை தேர்தல் அதிகரியுடனான ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, மக்களவை தேர்தல் தொடர்பான எங்களது கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக தலைமை தேர்தல் ஆணையரிடம் அளித்துள்ளோம். மக்களவைத் தேர்தல் ஜனநாயகமான முறையில், நியாமான தேர்தலாக நடத்தப்பட வேண்டும். வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடுகள் களையப்பட வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை இன்னும் நீக்கவில்லை. இதுபோன்று வாக்காளர் பட்டியலில் இரட்டைப்பதிவு உள்ளிட்ட குறைகள் களையப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் கூறியதாவது, பதற்றமான வாக்குசாவடிகளை கண்டறிந்து, கூடுதல் மத்திய பாதுகாப்பு படையினரை குவிக்க வேண்டும்.

அதன்படி, பதற்றமான வாக்குசாவடிகளில் தேர்தல் சுதந்திரமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். கடுமையான கோடை காலத்தில் தேர்தல் நடைபெறும் என்பதால், வாக்காளர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை மட்டுமே தேர்தல் பார்வையாளர்களாக பயன்டுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தெரிவித்தார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!