அதிக சத்தம் எழுப்பும் ஏர் ஹார்ன்… தனியார் பேருந்துகளை பந்தாடிய ஆர்டிஓ… அதிரடி சோதனையால் பரபரப்பு!!!
Author: Udayachandran RadhaKrishnan2 November 2023, 10:56 am
அதிக சத்தம் எழுப்பும் ஏர் ஹார்ன்… தனியார் பேருந்துகளை பந்தாடிய ஆர்டிஓ… அதிரடி சோதனையால் பரபரப்பு!!!
கோவையில் பேருந்துகளில் ஏர் ஹார்ன் உபயோகிப்பதை தடுக்கும் வகையில் நகர பேருந்து நிலைய வளாகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளை ஆய்வு செய்து அதில் 22 பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர்.
கோவையில் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் போக்குவரத்து நிறைந்த சாலைகளிலும் பேருந்து நிலையங்களிலும் அதிக ஒலி எழுப்பும் பேருந்துகளால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் இது குறித்து பொதுமக்கள் பலரும் தொடர்ந்து புகார் அளித்து வந்த நிலையில் காந்திபுரம் நகர பேருந்து நிலைய வளாகத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அனைத்து பேருந்துகளிலும் ஏர் ஹார்ன் உபயோகப்படுத்தப்படுகிறதா என அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை சரக இணை போக்குவரத்து ஆணையர் சிவகுமரன் தலைமையில் மத்திய வட்டார போக்குரத்து அலுவலர் சத்தியகுமார், வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சிவகுருநாதன்,மேற்கு வட்டார போக்குரத்து அலுவலர் ஆனந்த் மற்றும் கோவை மாவட்ட செயலாக்க பிரிவு வட்டார போக்குவரத்து அலுவலர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் இணைந்து நுற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் சோதனை நடத்தினர்.
அப்போது வாகன ஓட்டிகள் ஏர் ஹாரன் உபயோகிக்காமல் எலக்ட்ரிக்கல் ஹார்ன் உபயோகிக்க வேண்டும் என அறிவுறுத்திய அதிகாரிகள், அதிக ஒலி எழுப்பக் கூடிய ஏர் ஹாரன் உபயோகித்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஓட்டுநர்களை எச்சரித்தனர்.
தொடர்ந்து ஏர் ஹார்ன் உபயோகித்த அரசு மற்றும் தனியார் பேருந்துகள் என 23 பேருந்துகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் அபராதத்தையும் விதித்தனர். வட்டார போக்குவரத்து அதிகாரிகளின் இந்த அதரடி சோதனையால் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.