இரண்டு வருடத்திற்கு பிறகு மீண்டும் விமான சேவை : புதுச்சேரியில் இருந்து புறப்படும் முதல் விமானம் எந்த நகரத்துக்கு போகுது தெரியுமா?

Author: Udayachandran RadhaKrishnan
9 March 2022, 6:41 pm

புதுச்சேரி : இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற 27ஆம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் விமான சேவை நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவையை மீண்டும் தொடங்குவதற்கு புதுச்சேரி அரசு பல்வேறு விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்நிலையில் முதற்கட்டமாக புதுச்சேரியில் இருந்து பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு விமான சேவை தொடங்க இருப்பதாக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,

இதுகுறித்து புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத் மற்றும் பெங்களூர் நகரங்களுக்கு விமான போக்குவரத்து சேவையை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வருகின்ற மார்ச் 27ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாகவும், இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!