பெண் பயணியால் பரபரப்பான விமான நிலையம்: கடத்தி வரப்பட்ட 1.53 கோடி தங்கம்: வசமாக சிக்கியது எப்படி…?!

Author: Sudha
14 August 2024, 2:19 pm

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது.

இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து மலேசியா சிங்கப்பூர் துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கதுறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது பெண் பயணி ஒருவர் தனது உடலில் மறைத்து ரூபாய் 1.53 கோடி மதிப்பிலான 2291 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது

இவர் உடல் மற்றும் உடமைகளில் மறைத்து மேற்கண்ட தங்கத்தை நகைகளாக எடுத்து வந்தது கண்டறியப்பட்டது. இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து அந்த பெண் பயணியை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • ajith kumar and sivakarthikeyan on csk vs srh match அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!