தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரம் : மொத்தமாக முற்றுப்புள்ளி வைத்து முடித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

Author: Rajesh
24 March 2022, 1:28 pm

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியாக வலம் வந்தவர்கள் தான் தனுஷ்- ஐஸ்வர்யா, இவர்கள் கடந்த மாதம் பிரிய போவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதன் மூலம் அவர்களது 18 வருட திருமண வாழ்க்கை முறிந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினர்.

இதனிடையே, நடிகர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘பயணி’ ஆல்பத்திற்கு நடிகர் தனுஷ் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் நன்றி தெரிவித்தார். இதனால் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

மேலும், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது பெயருக்கு பின்னால் இருந்த நடிகர் தனுஷின் பெயரை நீக்காமல் இருந்து வந்தார்.
இதனால் நிம்மதி அடைந்த ரசிகர்கள்இ விரைவில் தனுஷும் ஐஸ்வர்யாவும் இணைந்து விடுவார்கள் என கருதி வந்தனர்.

இதனிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா செய்த செயல் தனுஷ் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் தனுஷ் பெயரை தனது ட்டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்காமல் இருந்து வந்த ஐஸ்வர்யா, அதனை நீக்கிவிட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதன்மூலம் தனுஷுடன் சேரும் மனநிலையில் தான் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லி இருந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் அவரது பெயரை நீக்கியுள்ளார்.
இருவரும் மீண்டும் இணைவதற்கு சாத்தியமே இல்ல என்றே தெரிகிறது. இதன் மூலம் பிரிவதற்கு எடுத்த முடிவுக்கு முற்றுப்புள்ளியை வைத்து முடித்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1677

    6

    8