வெளியானது நடிகர் அஜித்தின் ‘துணிவு’ பட போஸ்டர்.. பேனர் அடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிய மதுரை ரசிகர்கள்..!!

Author: Babu Lakshmanan
21 September 2022, 9:45 pm

நடிகர் அஜித்-ன் 61 அவது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதற்கு ரசிகர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமாரின் 61 ஆவது படத்திற்கு துணிவு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மேலும் மஞ்சு வாரியர், சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் கோக்கன், வீரா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

தொடர்ந்து இப்படம் குறித்தான பர்ஸ்ட் லுக் போஸ்டரை திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இது அஜித்குமாரின் ரசிகர்கள் இடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் மதுரையில் உள்ள அஜித்தின் ரசிகர்கள் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியான சில நிமிடங்களில் பேனராக தயார் செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 624

    0

    0