‘தலைவா துணிவு அப்டேட் கொடுங்க’: திமுக கொடியேற்று நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்ட அஜித் ரசிகர்கள்!!

Author: Babu Lakshmanan
24 December 2022, 8:37 am

திண்டுக்கல் ; நத்தத்தில் நடந்த திமுக கொடியேற்று நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் துணிவு படத்தின் அப்டேட் பற்றி அஜித் ரசிகர்கள் கேட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் இளைஞர்கள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். கடைசி நிகழ்ச்சியாக பேருந்து நிலையம் முன்பாக திமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் திமுக கொடியை ஏற்றிவைத்தார்.

பின்னர், அவர் காருக்கு திரும்பும் போது அங்கிருந்த அஜித் ரசிகர்கள் ‘தலைவா.. தலைவா துணிவு அப்டேட் கொடுங்கள்,’ என கேட்டு கோஷமிட்டுள்ளனர். இது தொடர்பான காணொளி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் துணிவு படத்தின் வெளியீட்டு உரிமையை, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

https://player.vimeo.com/video/784057231?h=7ced027705&badge=0&autopause=0&player_id=0&app_id=58479

முன்னதாக, உலகளவில் உள்ள அஜித் ரசிகர்கள் மைதானம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வலிமை படத்தின் அப்டேட் கேட்டது குறிப்பிடத்தக்கது.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!