“மேக் இன் இந்திய திட்டத்தின்” கீழ் ட்ரோன்களை தயாரிக்க அஜித்தின் தக்‌ஷா குழு தேர்வு.. கொண்டாடும் ரசிகர்கள்..!

Author: Rajesh
21 April 2022, 1:51 pm

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் Aerospace துறை சார்பாக தக்‌ஷா தனியார் நிறுவனமாக பதிவாகியுள்ளது. தொடர்ந்து மாநில அளவில் தக்‌ஷா குழு ட்ரோன் தயாரிப்பில் பெரிய அளவில் பங்களிப்பை அளித்து வருகிறது.

இந்த நிலையில் ‘மேக் இன் இந்திய திட்டத்தின்’ கீழ் மத்திய பயணிகள் விமான சேவை துறை சார்பாக ஆளில்லா விமானம் தயாரிப்பதற்கு சென்னை-யில் தக்‌ஷா குழு தேர்வாகியுள்ளது.

மொத்தம் 5 நிறுவனமும், ஆளில்லா விமானம் உதிரி பாகங்கள் தயாரிப்புக்கு 9 நிறுவனங்களும் தேர்வாகியுள்ளது. அண்ணா தொழில் நுட்ப கல்லூரி இந்திய அளவில் சக்தி வாய்ந்த கல்லூரி. நடிகர் அஜித் விமானம் ஓட்டுபத்தில் மிகவும் திறமையானவர் என்பதால், இவர் கல்லூரி தொழில் ஆலோசராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த கல்லூரி விமான பிரிவு மாணவர்களுக்கு நடிகர் அஜித் அடிக்கடி பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்குவார் .

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்‌ஷா ஆளில்லா விமானம் குழு, மத்திய அரசுக்கு ட்ரோன்-களை தயாரித்து கொடுப்பதற்கு தேர்வாகியுள்ளது.

10ம் வகுப்போடு படிப்பில் நின்றுவிட்டு, தற்போது இவர் ஆலோசனையில் இயங்கிய குழு ஒன்று பல்வேறு சாதனைகளை படைத்திருப்பது அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. நடிகர் அஜித் வெறும் நடிகர் மட்டுமல்ல என்பதனை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம். இந்த செய்தியினை அறிந்த அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி