புது லுக்கில் அஜித் : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

Author: Rajesh
1 May 2022, 7:28 pm

1993-ல் தமிழில் அமராவதி படத்தின் மூலம் அறிமுகமான அஜித்துக்கு முதல் படத்திலேயே தமிழ் சினிமா சிவப்பு கம்பளம் விரித்துவிடவில்லை. கூடவே இவருடைய தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லை என்பதுபோன்ற விமர்சனங்களும் எழுந்தன. எனினும் தொடர்ந்து விடா முயற்சியுடன் போராடிய அஜித்துக்கு ஆசை, காதல் கோட்டைபோன்ற படங்கள் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்தது.

தொடர்ந்து காதல் மன்னன், வாலி, தீனா, சிட்டிசன் என அடுத்தடுத்து பல வெற்றிகளைக் கொடுத்த அஜித், அதன்மூலம் எம்.ஜி.ஆர், ரஜினி வரிசையில் தமிழ் சினிமாவின் அடுத்த வசூல் சக்ரவர்த்தியாக உருவெடுத்தார்.

ஒவ்வொரு முறை வீழும் போதும் ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வந்து முன்பிருந்ததை விட பெரிய ஹிட் கொடுப்பது அஜித்தின் ஸ்டைல். இந்த நிலையில் இன்று தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் மட்டுமின்றி, அரசியல் பிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். டவுசருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் செம வைரலாகியுள்ளது.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!