சாதாரண மனிதர்.. திறமையால் ரோல் மாடலாக மாறியவர் : AJITH பிறந்தநாள்.. காரணத்தை அடுக்கிய அண்ணாமலை!!

Author: Udayachandran RadhaKrishnan
1 May 2024, 1:47 pm

சாதாரண மனிதர்.. திறமையால் ரோல் மாடலாக மாறியவர் : AJITH பிறந்தநாள்.. காரணத்தை அடுக்கிய அண்ணாமலை!!

விடாமுயற்சியால் தமிழ் சினிமாவின் தனக்கென தனி ரசிகர் படையை கொண்டு வந்தவர் நடிகர் அஜித். அவருக்கு இன்று 53வது பிறந்தநாள். இந்நிலையில் தான் அஜித்தின் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர் எக்ஸ் பக்கத்தில் #Happy Birthday AK, #GoodBadUgly, #VidaaMuyarchi என்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்ட்டிங்கில் உள்ளன.

மேலும் நடிகர் அஜித்தின் தீனா, மங்காத்தா உள்ளிட்ட பல படங்கள் தியேட்டர்களில் ரீ ரிலிஸ் செய்யப்பட்டுள்ளன. அந்த படங்களை பார்த்து ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

அஜித்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், நடிகர் அஜித் குமாருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: தன்னம்பிக்கையை மட்டும் துணையாகக் கொண்டு,எளிய பின்புலத்தில் இருந்து வந்து, தனது திறமையால் மக்களை கவர்ந்து, திரையுலகின் முக்கிய அடையாளங்களில் ஒருவராக உயர்நீதிருக்கும், நடிகர், சகோதரர் அஜித்குமாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு அஜித் ரசிகர்கள் கமெண்ட்டில் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வந்த காரை வழிமறித்த அதிமுகவினர்.. நொடியில் நடந்த சம்பவம்!

மேலும் சில பாஜகவினர் ஏற்கனவே நடிகர் அஜித் பற்றி அண்ணாமலை பேசிய வீடியோவை கமெண்ட்டில் பகிர்ந்து வருகின்றன. அந்த வீடியோவில் அண்ணாமலை, ‛‛அஜித்தின் உழைப்பு அசாத்தியமானது. ஒரு தனிமனிதனாக சினிமா துறையில் எந்த பின்புலம் இன்றி ஒரு மனிதன் இவ்வளவு பெரிய சாதனைகளை செய்துள்ளார். சதாரண மனிதருக்கு அவர் ஒரு ரோல் மாடல்’ என தெரிவித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 298

    0

    0