வலிமை திரைப்படம் குறித்து அஜித்தின் சகோதரர் வெளியிட்ட ட்விட் : அதகளப்படுத்திய ரசிகர்கள்!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 February 2022, 2:14 pm

வலிமை திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாட திட்டமிட்டுள்ளனர். படத்தின் பாடல், ட்ரெய்லர் என அனைத்தும் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் நாளை உலகமெங்கும் வெளியாகிறது.

Ajith Kumar Family Photos - Parents, Father, Mother, Sister, Spouse, Son &  Daughter. - YouTube

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, புகழ், கார்த்திகேயா என பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Valimai 10M Poster 1 UHD | Valimai 10M Poster 1without credi… | Flickr

படம் நாளை வெளியாக உள்ள நிலையில் படக்குழு பல்வேறு ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அஜித்தின் அண்ணன் அனில் குமார், வலிமை முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

Ajith's 'Valimai' Movie: Makers of Ajith's 'Valimai' to release a bike  stunt sequence soon

இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட் பதிவை ரசிகர்கள் லைக் செய்தும் ஷேர் செய்தும் கொண்டாடி வருகின்றனர். அந்த ட்விட்டர் பதிவில், வலிமை புதுப்பிப்பை பற்றி எப்போதும் என்னிடம் கேட்டு எந்த பதிலும் இல்லாததால் எரிச்சலடைந்திருப்பீர்கள்.. இருப்பினும் இப்போது நான் ஒன்றை ஒப்புக்கொள்ள வேண்டும். வலிமை படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்க்க காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1781

    2

    0