மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார் அஜித்தின் ஃபேவரைட் கதாநாயகி : அட.. மாஸ் ஹீரோ படத்தில் ரீ என்ட்ரியா..!!

Author: Udayachandran RadhaKrishnan
27 March 2022, 4:52 pm

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மனிஷா கொய்ராலா நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான முதல்வன் படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் லைலா.

இதையடுத்து ரோஜாவனம், பார்த்தேன் ரசித்தேன் போன்ற படங்களில் நடித்த இவர், கடந்த 2001-ம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தீனா படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பேமஸ் ஆனார். இப்படத்தில் அவர் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

Laila - IMDb

இதன் பின்னர் விக்ரம் உடன் தில், சூர்யாவுக்கு ஜோடியாக நந்தா, பிதாமகன், உன்னை நினைத்து, மவுனம் பேசியதே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார் லைலா. பின்னர் அஜித்துடன் பரமசிவன் மற்றும் திருப்பதி ஆகிய படங்களில் நடித்த லைலா, இதன்பின் நடிப்புக்கு முழுக்கு போட்டார்.

ACTRESS LAILA FAMILY PHOTOS WITH HUSBAND SONS AND BIOGRAPHY - YouTube

இவர் கடந்த 2006-ம் ஆண்டு ஈரானை சேர்ந்த தனது நீண்ட நாள் காதலனான மெஹ்தின் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த லைலா, இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

Actress Laila to make a comeback with 'Alice' | Tamil Movie News - Times of  India

இந்நிலையில், தற்போது நடிகை லைலா 16 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ளார். அதன்படி கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் லைலா. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 1373

    11

    1