நீங்க வேற லெவல் ஆதிக்…Good Bad Ugly படத்தில் அஜித்தின் மிரட்டல் போஸ்டர் : கொண்டாடும் ரசிகர்கள்..!!

Author: Udayachandran RadhaKrishnan
19 May 2024, 7:54 pm
gud
Quick Share

நீங்க வேற லெவல் ஆதிக்…Good Bad Ugly படத்தில் அஜித்தின் மிரட்டல் போஸ்டர் ; கொண்டாடும் ரசிகர்கள்..!!

மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் சமீபத்தில் அஜித் குமார் கமிட்டாகி இருந்தார் .

விடாமுயற்சி படத்தைத் தாண்டி குட் பேட் அக்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றியுள்ளது. இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தைக் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.


படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் அஜித் மூன்று முக பாவனையை கொடுத்தபடியுள்ளார். ஒன்று சாந்தமாகவும், ஒன்று சிரித்துக்கொண்டும் மற்றொன்று கோவமாக முக பாவனையில் காணப்படுகிறார்.

மேஜையில் துப்பாக்கிகள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர் தற்பொழுது ரசிகர்களுக்கு விருந்து அலளிக்கும் வகையில் இருக்கிறது. தற்பொழுது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது.

படத்தை புஷா திரைப்படத்தை தயாரித்த மைத்த்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.

அதன்படி ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குட் பேட் அக்லி படம் 2025 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Views: - 153

0

0