AK61 படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ காட்சிகள் லீக்… அதிர்ச்சியில் உறைந்து போன படக்குழு..!!

Author: Babu Lakshmanan
26 July 2022, 8:03 pm

நடிகர் அஜித் குமார் நடித்து வரும் AK 61 படத்தின் சூட்டிங் காட்சிகள் வெளியாகியிருப்பது படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஐரோப்பாவில் ஒரு மாத காலம் விடுமுறையை கழித்த நடிகர் அஜித்குமார், ஓரிரு தினங்களுக்கு முன்பாகத்தான் சென்னை வந்தார். இதைத் தொடர்ந்து, அவர் பட சூட்டிங்கில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக, ஏற்கனவே இயக்குநர் எச். வினோத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள AK61 பட சூட்டிங் நடைபெற இருக்கிறது.

இந்தப் படம் வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருவதாகவும், இதில் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் படத்தின் இறுதி அட்டவணை வெளியாகாத நிலையில், படத்திற்காக போடப்பட்டுள்ள பேங்க் செட் புகைப்படமும், வீடியோவும் தற்போது இணையத்தில் லீக்காகி உள்ளது. வங்கி செட்டுக்காக பிரஞ்சு ஸ்டைல் கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளது. இது படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/i/status/1551833432527106048
  • Meenakshi Chaudhry மீனாட்சி செளத்ரிக்கு அரசாங்கம் அடித்த ஆர்டர்? உண்மை நிலவரம் என்ன?