உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக்கால் நடவு.. சிறந்த காளையர் மற்றும் காளைக்கு பரிசை அறிவித்தார் அமைச்சர் மூர்த்தி
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் முகூர்த்தக்கால் நடப்பட்டு, ஜல்லிக்கட்டுக்கான பிற பணிகள் தொடங்கியது.
உலகப்புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் இன்று முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அலங்கநல்லூர் வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின் முகூர்த்தக்கால் நடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் விழா கமிட்டியினர் கலந்து கொண்டனர். முகூர்த்தகால் நடப்பட்டதையடுத்து அலங்காநல்லூர் வாடிவாசலுக்கு வர்ணம் பூசுவது, கேலரி அமைப்பது உள்ளிட்ட பணிகள் தொடங்கவுள்ளது.
மதுரை அவனியாபுரத்தில் வரும் 15ஆம் தேதியும், பாலமேட்டில் 16 ஆம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக காளையில் உரிமையாளர்கள் காளைகளுக்கு பயிற்சி கொடுத்து வருகின்றனர்.
காளையை பிடிக்க இருக்கும் மாடுபிடி வீரர்களுக்கு தற்காலிக வாடிவாசல் அமைத்து காளைகளை பிடிப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை பெற்று வருகின்றனர். தற்போது, ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் காளைகளுக்கு மாவட்டம் முழுவதும் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு காளைகளுக்கான தகுதி சான்று வழங்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது :- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரருக்கும் தலா ஒரு கார் பரிசு வழங்கப்படும். மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானம் வரும் 23 அல்லது 24 ஆம் தேதி திறக்கப்பட்டு அன்று மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும், என தெரிவித்தார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.