அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் திடீர் கூட்டநெரிசல் ; பார்வையாளர்கள் மீது தடியடி : தெறித்து ஓடிய பொதுமக்கள்… மதுரையில் பரபரப்பு…!!!

Author: Babu Lakshmanan
17 January 2024, 4:41 pm

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த பார்வையாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டியை காண தமிழகம் முழுவதிலிருந்தும் ஏராளமான பார்வையாளர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

ஜல்லிக்கட்டு வாடிவாசலை காண வேண்டும் என பார்வையாளர்கள் ஆர்வத்துடன் வாடி வாசலில் இருக்கும் பகுதியை நோக்கி குவிந்து வருகின்றனர். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏணையோர் ஏமாற்றத்தில் விரக்தி அடைந்தனர்.

சிலர் எப்படியாவது ஜல்லிக்கட்டு போட்டியை காண வேண்டும் என காவல்துறை அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலி பகுதியை நோக்கி கூட்டம் கூட்டமாக முண்டியடித்தனர். கூட்டம் தொடர்ந்து குவிந்து வந்ததை அடுத்து கூட்டத்தை கலைக்க போலீசார் திடீரென தடியடி நடத்தினர்.

அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கிய நபருக்கு ஆம்புலன்சில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டியை காண ஆர்வத்துடன் தமிழகம் முழுவதிலிருந்தும் கேரளாவில் இருந்தும் வருகை தந்த பார்வையாளர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!