மதுவால் நிகழ்ந்த விபரீதம் : 2 பேருக்கு அரிவாள் வெட்டு : போலீசார் விசாரணை

Author: kavin kumar
1 February 2022, 2:30 pm

திண்டுக்கல் : மதுபோதையில் நண்பர்களுக்குள் தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பங்காளி மார்க்கெட் பகுதியில் நல்லாம்பட்டி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி, மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த குமார், என்.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்த கௌதம் ஆகிய 3 பேரும் தினமும் மது அருந்துவது வழக்கமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் மூன்று பேரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். மதுபோதை உச்சத்தை தொட்டதால் நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு பின்பு சண்டையாக மாறி உள்ளது.

அப்பொழுது அருகில் கிடந்த கூர்மையான ஆயுதத்தை கொண்டு தலையில் தாக்கியதால் கார்த்தி என்பவருக்கு தலையில் வெட்டு விழுந்துள்ளது. அதேபோல் குமாருக்கு கழுத்துப் பகுதியில் வெட்டு விழுந்துள்ளது. இருவரும் ரத்த வெள்ளத்தில் கத்திய பொழுது கௌதம் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். உடனடியாக அங்கு வந்த காவல் துறையினர் விரைந்து கௌதமை பிடித்துள்ளனர். அதே போல் ரத்த வெள்ளத்தில் இருந்த இருவரையும் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு தற்போது திண்டுக்கல் வடக்கு நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

  • Cool Suresh calls for Bigg Boss ban பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை பண்ணுங்க..கொந்தளித்த கூல் சுரேஷ்..!
  • Views: - 2323

    0

    0