சத்துணவு கூடத்தில் புகுந்து முட்டைகளை திருடி ஆம்லெட் போட்டு பார்ட்டி கொண்டாடிய மதுப்பிரியர்கள் : அரசுப் பள்ளியில் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
23 January 2024, 10:34 am

சத்துணவு கூடத்தில் புகுந்து முட்டைகளை திருடி ஆம்லெட் போட்டு பார்ட்டி கொண்டாடிய மதுப்பிரியர்கள் : அரசுப் பள்ளியில் பரபரப்பு!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த சுட்டிகாலாடிபட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களாக சனி,ஞாயிற் தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பள்ளியின் காம்பௌண்ட் சுவர் தாண்டி குதித்து உள்ளே சென்று சத்துணவு கூட சமையலறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று குழந்தைகளுக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட சத்துணவு முட்டைகளையும் எண்ணெய்,மசாலா பொடிகளை பயன்படுத்தி அங்கேயே உள்ள அடுப்பில் ஆம்லெட் போட்டு மது அருந்தி பார்ட்டி கொண்டாடியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று காலை வழக்கம்போல சமயலறையைத் திறந்த பார்த்த பணியாளர்கள் சத்துணவு முட்டைகள் திருடப்பட்டு ஆம்லெட் போட்டு தின்று பார்ட்டி கொண்டாடி அலங்கோலமாக காட்சியளித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை அடுத்து மேலிட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இளைஞர்கள் சிலர் விடுமுறை நாளில் அத்துமீறி பள்ளியில் உள்ளே நுழைந்து குழந்தைகளுக்காக வைக்கப்பட்டிருந்த சத்துணவுமுட்டைகளை திருடி ஆம்லெட் போட்டு பார்ட்டி கொண்டாடியது பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும் கேஸ் சிலிண்டர் மற்றும் மீத முட்டைகள் அரிசி,பருப்பு எண்ணெய்களை உட்பட மற்ற பொருட்களை அப்படியே விட்டுச் சென்றது அவர்களுடைய சிறிது நிம்மதியையும் ஏற்படுத்தியதாக தெரிவித்தனர்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…